ADDED : மார் 21, 2026 04:47 AM
காட்டுமன்னார்கோவில்: குடும்ப பிரச்னை காரணமாக அக்காவை ஆபாசமாக திட்டி தாக்கிய தம்பிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த கக்கன் நகரை சேர்ந்த தங்கப்பன் மகன்கள் அரவிந்தராஜ் 27; ஆனந்தராஜ் 25; இவர்களது அக்கா ஹேமா 28; இவர் சதீஷ்குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் குடியிருந்து வருகிறார்.
அக்கா ஹேமா காதல் திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஹேமா வீட்டில் இருந்த போது, அரவிந்தராஜ், ஆனந்தராஜ் இருவரும் வீட்டிற்குள் சென்று தகராறு செய்து அவரை தாக்கினர்.
இதில் ஹேமாவுக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
