/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரு சிறுமிகள் கர்ப்பம்; இருவருக்கு போக்சோ
/
இரு சிறுமிகள் கர்ப்பம்; இருவருக்கு போக்சோ
ADDED : மார் 16, 2025 07:21 AM
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் இருவேறு பகுதிகளில், சிறுமிகளை கர்ப்பமாக்கிய இருவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த எடச்சித்துார் வெங்கடேசன் மகன் ரங்கநாதன், 30. இவர், 17 வயது சிறுமியை காதலித்து, அங்குள்ள விநாயகர் கோவிலில் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் தனிக்குடித்தனம் இருந்ததால், சிறுமி கர்ப்பமானார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபோது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதேபோல், எம்.பட்டியை சேர்ந்த கொளஞ்சி மகன் சங்கர், 24, என்பவரும் 17 வயதுடைய சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பாரதி, 59, புகாரின் பேரில், ரங்கநாதன், சங்கர் ஆகியோர் மீது போக்சோ பிரிவின் கீழ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனர்.