/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலத்தில் கார் மோதி விபத்து இருவர் பலி; மூவர் படுகாயம்
/
பாலத்தில் கார் மோதி விபத்து இருவர் பலி; மூவர் படுகாயம்
பாலத்தில் கார் மோதி விபத்து இருவர் பலி; மூவர் படுகாயம்
பாலத்தில் கார் மோதி விபத்து இருவர் பலி; மூவர் படுகாயம்
ADDED : அக் 19, 2024 09:25 PM

விருத்தாசலம்:கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணிக்கு, 'கியா' காரில், கெங்கேரி கிராமத்தை சேர்ந்த ஐந்து பேர் சென்றனர்.
நேற்று நண்பகல், 12:00 மணியளவில், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், ஊ.ஆதனுார் கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பாலத்தின் சிமென்ட் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன்பகுதி நொறுங்கியது.
காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை, அங்கிருந்தவர்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர்.
அதில், உன்னிகிருஷ்ணன் மனைவி கங்காலட்சுமி, 68, சம்பவ இடத்திலேயே இறந்தார். காரை ஓட்டி வந்த பேட்ரிக், 50, மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.
காரில் வந்த பேட்ரிக் மனைவி நித்யா, 43, மகள் ஆதியா, 17, உறவினர் உன்னிகிருஷ்ணன், 79, ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.