ADDED : மே 29, 2026 05:18 AM
சேத்தியாத்தோப்பு: நடந்து சென்றவர் மீது ஸ்கூட்டி மோதிய விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.
காட்டுமன்னார்கோவில் பெரியார் நகரைச் சேர்ந்த சிங்காரவேலன் மகன் வேலழகன், 27; ஐ.டி., நிறுவன ஊழியர்.
இவர் தனது ஸ்கூட்டி மொபட்டில் நேற்று மாலை 4:00 மணியளவில், வீராணம் ஏரிக்கரை சாலையில் சேத்தியாத்தோப்பிற்கு வந்தார்.
வாழைக்கொல்லை, சுடுகாடு வளைவு அருகே வந்தபோது முன்னால் நடந்து சென்ற வாழைக்கொல்லையை சேர்ந்த செல்வராசு, 50; என்பவர் மீது ஸ்கூட்டி மோதியது.
இதில், செல்வராசு வீராணம் ஏரிக்குள் விழுந்தார். வேலழகனுக்கும் பலத்த அடிபட்டது. இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள் பரிசோதித்ததில் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்த புகா ரின் பேரில் ஒரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
