UPDATED : அக் 11, 2026 05:07 PM
ADDED : அக் 11, 2026 04:26 PM
புதுச்சத்திரம்: டிராக்டர் டிரைவரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சுரேஷ், 31; டிராக்டர் டிரைவர். இவர், நேற்று பெரியப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சிமெண்ட் லோடு ஏற்றுவதற்காக, தனது டிராக்டரை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, அங்கு வந்த பெரியப்பட்டைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் அரவிந்தசாமி,25; நாகராஜன் மகன் சுரேந்திரன்,28; ஆகியோர், ஏன் டிராக்டரை வழியில் நிறுத்தியுள்ளீர்கள் என கேட்டதால், வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்தசாமி, சுரேந்திரன் இருவரும் சேர்ந்து, சுரேஷை தாக்கி, மிரட்டல் விடுத்துச்சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து, அரவிந்தசாமி, 25; சுரேந்திரன், 28; ஆகியோரை கைது செய்தனர்.
