தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முன்விரோதத்தில் மூவரை தாக்கிய இருவர் கைது

முன்விரோதத்தில் மூவரை தாக்கிய இருவர் கைது

முன்விரோதத்தில் மூவரை தாக்கிய இருவர் கைது


UPDATED : நவ 13, 2026 10:15 PM

ADDED : நவ 13, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 10:15 PM ADDED : நவ 13, 2026 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: முன்விரோதத்தில் மூவரை வழிமறித்து தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் அடுத்த இறையூர், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ்,63; இவரது உறவினர்கள் முத்துராஜ், பாக்கியலட்சுமி, ஜோன்ஸ் பிரியா ஆகியோர் வழக்கு சம்பந்தமாக முன்ஜாமின் பெற்று பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டு வந்தனர்.

இவர்கள், கடந்த 8ம் தேதி காலை 10:30 மணிக்கு கையெழுத்து போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றபோது, இறையூர் தனியார் வங்கி அருகே மரத்தடியில் அமர்ந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மகன் சுதன் குமார், சதீஷ், எழிலரசன், அஜித் ஆகியோர் வழிமறித்து மூவரையும் முன்விரோதம் காரணமாக திட்டி, தாக்கினர்.

இதனை கண்டித்த அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் அருணை, அன்று இரவு நான்கு பேரும் சேர்ந்து இரும்பு ராடால் தாக்கினர். படுகாயமடைந்த அருண் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து சுதன் குமார், 25, அஜித், 28, ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us