தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாடு திருடிய வழக்கில் மேலும் இருவர் கைது

மாடு திருடிய வழக்கில் மேலும் இருவர் கைது

மாடு திருடிய வழக்கில் மேலும் இருவர் கைது


UPDATED : அக் 17, 2026 08:08 PM

ADDED : அக் 17, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 08:08 PM ADDED : அக் 17, 2026 08:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்: வக்கீல் கொலை முயற்சிக்கு காரணமான மாடு திருடிய வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த மதகடி அழகர்வட்டத்தைச் சேர்ந்த ஜம்புலிங்கம் வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த மாடு கடந்த மார்ச் 1ம் தேதி திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் கக்கன் நகர் தங்கப்பன் மகன் ஆனந்தராஜ், காமராஜ் மகன் வக்கீல் தங்கவிக்ரம், கக்கன் மகன் அஜித்குமார் ஆகியோர் மீது காட்டமன்னார்கோவில் போலீசார் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆனந்தராஜ், வக்கீல் தங்கவிக்ரம் இருவரும் முன்ஜாமீன் பெற்றனர். அஜித்குமார் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் முன்ஜாமின் பெற்ற வக்கீல் தங்கவிக்ரமை, ஜம்புலிங்கம் கூலிப்படை ஏவி சரமாரியாக வெட்டிகொலை செய்ய முயன்றனர்.

இந்த கொலை முயற்சிக்கு காரணமான மாடு திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி., ராமலிங்கம் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்த காட்டாகரம் கக்கன் மகன் அஜித்குமார்,29; காட்டுமன்னார்கோவில் அடுத்த தொண்டமாநத்தம் கோபி மகன் மதுபாலன்,25; ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us