/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி சிறுமிக்கு சூடு வைப்பு; தாய் உட்பட 2 பேர் கைது
/
பள்ளி சிறுமிக்கு சூடு வைப்பு; தாய் உட்பட 2 பேர் கைது
பள்ளி சிறுமிக்கு சூடு வைப்பு; தாய் உட்பட 2 பேர் கைது
பள்ளி சிறுமிக்கு சூடு வைப்பு; தாய் உட்பட 2 பேர் கைது
ADDED : ஆக 21, 2025 11:10 AM
ராமநத்தம்: ராமநத்தம் அருகே பள்ளி சிறுமிக்கு சூடு வைத்து துன்புறுத்திய தாய் உட்பட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த மா.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி மகள் ஜனனி, 8; தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை ஜோதி கடந்தாண்டு இறந்த நிலையில், ராமநத்தம் அடுத்த ஆவட்டியில் அவரது தாய் மணிமேகலை, 33; அத்தை அனிதா,30 ; ஆகியோரின் பராமரிப்பில் உள்ளார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுமிக்கு சூடு வைத்து துன்புறுத்தி உள்ளனர். இதனையறிந்த கடலுார் மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் அளித்த புகாரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து, சிறுமியின் தாய் மணிமேகலை, 33; அத்தை அனிதா, 30 ;ஆகிய இருவரையும் கைது செய்தனர்.