/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கில் சென்ற போது விபத்து லாரி மோதி இருவர் பரிதாப பலி
/
பைக்கில் சென்ற போது விபத்து லாரி மோதி இருவர் பரிதாப பலி
பைக்கில் சென்ற போது விபத்து லாரி மோதி இருவர் பரிதாப பலி
பைக்கில் சென்ற போது விபத்து லாரி மோதி இருவர் பரிதாப பலி
ADDED : நவ 07, 2025 02:18 AM

திருப்பாதிரிப்புலியூர்: கடலுாரில் பைக் மீது லாரி மோதி, இருவர் உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த வேலுடையான் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஸ்டான்லி, 32, கடலுாரில் தனியார் நிறுவன விற்பனை மேலாளர். நேற்று காலையில் இவர், தன், 'யமஹா எப்.இசட்.,' பைக்கில், அவருடன் வேலை பார்க்கும் மேலவன்னியூரை சேர்ந்த விஜயகுமார், 29, என்பவருடன் ஜவான்பவன் நோக்கி சென்றார்.
பைக்கை விஜயகுமார் ஓட்டினார். முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் விஜயகுமார், ஆரோக்கிய ஸ்டான்லி உயிரிழந்தனர்.
இதுகுறித்த புகாரின்படி, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.