/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் சீர் கொடுக்க சென்ற இருவர் விபத்தில் சிக்கி பலி
/
பொங்கல் சீர் கொடுக்க சென்ற இருவர் விபத்தில் சிக்கி பலி
பொங்கல் சீர் கொடுக்க சென்ற இருவர் விபத்தில் சிக்கி பலி
பொங்கல் சீர் கொடுக்க சென்ற இருவர் விபத்தில் சிக்கி பலி
ADDED : ஜன 16, 2025 11:55 PM

நெய்வேலி:கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த ஆயிப்பேட்டை, பெருமாள் கோவில் தெருவைசேர்ந்தவர் மதியழகன் மகன் சுதாகர், 23, திருமணம் ஆகாதவர். அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ் கண்ணன், 28. இவரது மனைவி சுருதி, 24.
இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. ராஜேஷ் கண்ணனின் சகோதரி, முதனை கிராமத்தில் வசிக்கிறார்.
அவருக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக ராஜேஷ் கண்ணன், தன் நண்பர் சுதாகருடன் நேற்று மாலை 4:15 மணிக்கு நெய்வேலி டவுன்ஷிப் வழியாக இரு சக்கர வாகனத்தில் முதனை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் நெய்வேலி வட்டம் - 1ல் சோலார் மின் நிலையம் அருகே, சாலையில் வேகத்தடையை கவனிக்காமல் சென்றதில் நிலை தடுமாறி விழுந்தனர்.
இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவரும் இறந்தனர்.