தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சென்னையை சேர்ந்த இருவர் கார் கவிழ்ந்த விபத்தில் பலி

சென்னையை சேர்ந்த இருவர் கார் கவிழ்ந்த விபத்தில் பலி

சென்னையை சேர்ந்த இருவர் கார் கவிழ்ந்த விபத்தில் பலி


ADDED : பிப் 16, 2025 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 02:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்: கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் இறந்தனர்; மூன்று பேர் காயமடைந்தனர்.

சென்னை, பாடியைச் சேர்ந்தவர் சபரிநாத், 36. இவர், நேற்று முன்தினம் இரவு தன் நண்பர்களுடன், 'எர்டிகா' காரில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். காரை, சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், 35, ஓட்டினார்.

நள்ளிரவு, 12:45 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது

இதில், சபரிநாத், பள்ளிக்கரணையைச் சேர்ந்த பிரபாகரன், 36, சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த டிரைவர் அப்துல் ஹக்கீம், மதுரவாயல் உதய பாஸ்கர், 38, தரமணி ஜீவன் ராஜ், 20, ஆகிய மூன்று பேரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us