/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரியில் இருதரப்பு மோதல்; 5 மாணவர்கள் மீது வழக்கு
/
கல்லுாரியில் இருதரப்பு மோதல்; 5 மாணவர்கள் மீது வழக்கு
கல்லுாரியில் இருதரப்பு மோதல்; 5 மாணவர்கள் மீது வழக்கு
கல்லுாரியில் இருதரப்பு மோதல்; 5 மாணவர்கள் மீது வழக்கு
ADDED : அக் 01, 2025 01:18 AM
விருத்தாசலம்; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் கலை திருவிழா நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு துறை மாணவர்கள் ஒவ்வொரு நாள் திருவிழாவில் பங்கேற்று நடனம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த கலை திருவிழாவில் நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பி.ஏ., மூன்றாமாண்டு பொருளியல் மாணவர் நடனம் ஆடும் போது, அருகில் இருந்த பி.எஸ்சி., கணிதம் மூன்றாமாண்டு மாணவரின் மீது கால்பட்டுள்ளது.
இதனால், இருதரப்பு மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு, தாக்கி கொண்டனர். இருதரப்பு புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக் கின்றனர்.