/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வுக்கு 'இரண்டாண்டு'
/
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வுக்கு 'இரண்டாண்டு'
ADDED : அக் 10, 2024 02:12 AM
கடலுார்:கடலுார் மாவட்டம், நல்லாத்துாரில் கடந்த 2012ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர் வசந்தி. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், தன் வீட்டிற்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்தார். அதற்கு வசந்தி, 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சப் பணத்தை பெற்ற வசந்தியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, கடலுார் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட வசந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
தண்டனை விதிக்கப்பட்ட வசந்தி, தற்போது பண்ருட்டி தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.