தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இளைஞர் தாக்குஇருவர் கைது

 இளைஞர் தாக்குஇருவர் கைது

 இளைஞர் தாக்குஇருவர் கைது


ADDED : ஜூலை 31, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மதுபோதையில் இளைஞரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த பரவளூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சுப்ரமணி, 26. கடந்த 28ம் தேதி, தலையில் பலத்த காயங்களுடன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், படுகளாநத்தம் தங்கவேல் மகன் போத்துமணி, 33, திருமால் மகன் திரிசங்கு, 24, ஆகியோர் தாக்கியது தெரிந்தது.

மூவரும் பரவளூர் டாஸ்மாக்கில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், சுப்ரமணியை படுகளாநத்தம் கிராமத்திற்கு அழைத்துச் சென்று கல் மற்றும் கட்டையால் தாக்கியதில், படுகாயமடைந்தது தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, போத்துமணி, திரிசங்கு இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us