ADDED : மே 20, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: பொது இடத்தில் மதுஅருந்திவிட்டு அட்டகாசம் செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் இரவு மதுவாங்கிய வாலிபர்கள் இருவர், சாலையில் அமர்ந்து மதுஅருந்தினர். அங்கிருந்த போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சண்முகராஜா, ஏட்டு சிலம்பரசன் எச்சரித்தும் செல்லவில்லை. இதனால் கடலுார் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போதையில் இருந்த வாலிபர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். அதில், மேட்டுக்காலனி ஜெயவீரபாண்டியன் மகன் நாராயணன், 28, குப்புசாமி மகன் மோகன், 42, என்பது தெரிந்தது. சப் இன்ஸ்பெக்டர் சண்முகராஜா புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பிரதாப்சந்திரன் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தார்.
