UPDATED : மே 26, 2026 04:01 PM
ADDED : மே 26, 2026 03:20 PM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் திருமணமாக விரக்தியில் டைலர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வடலுாரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜெயராஜ்,40; டைலர். இவர் சேத்தியாத்தோப்பு ,சென்னிநத்தம் தங்கராசு நகரில் தனியாக வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளார்.
தற்போது சேத்தியாத்தோப்பு கடைவீதியில் ஜெயராஜ் தனியாக கடைவைத்து டைலரிங் தொழில் செய்து வருகிறார. இவருக்கு 40 வயதாகியும் திருமணமாகாததால் விரக்தியடைந்த நிலையில் இருந்து வந்தார். இன்று ( மே 26) வீட்டில் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றினால் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் ஜெயராஜ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
