தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., ஆட்சி அமைவது உறுதி உதயநிதி நம்பிக்கை

 தி.மு.க., ஆட்சி அமைவது உறுதி உதயநிதி நம்பிக்கை

 தி.மு.க., ஆட்சி அமைவது உறுதி உதயநிதி நம்பிக்கை


ADDED : ஏப் 13, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 04:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைவது உறுதி என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

நெய்வேலியில் நேற்று துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி உங்களிடம் உரிமையோடு ஓட்டு கேட்டு வருகிறோம். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து பெண்களுக்கு கட்டணமில்லாமல் பஸ் பயணம், பள்ளி குழந்தைகளுக்கு தரமான காலை உணவு, கல்லுாரி பெண்களுக்கு ஊக்கத்தொகை போன்ற நலத்திட்டங்கள் தான்.

தற்போது, ஒரே மாதத்திற்குள் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கினார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாதம் தோறும் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த திட்டத்தை எப்படியாவது ,தேர்தலை காரணம் காட்டி நிறுத்த நினைத்தனர்.

ஆயிரம் கொடுப்பதை நிறுத்த நிணைத்தவர்களுக்கு மத்தியில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதத்திற்கு சேர்த்துரூ.5000 கொடுத்தார்.

வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 வழங்குவோம். முதலமைச்சர் காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டித் தரப்படும்.

இந்த தேர்தலில் டில்லி அணிக்கும் தமிழக அணிக்கும்தான் போட்டி. இதில் தமிழக அணி தான் ஜெயிக்கும்.

இவ்வாறு உதயநிதி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us