தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வரலாறு படைக்க வேண்டும் : உதயநிதி உற்சாகம்

 வரலாறு படைக்க வேண்டும் : உதயநிதி உற்சாகம்

 வரலாறு படைக்க வேண்டும் : உதயநிதி உற்சாகம்


UPDATED : மார் 13, 2026 08:58 AM

ADDED : மார் 13, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2026 08:58 AM ADDED : மார் 13, 2026 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டக்குடி: சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும் என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

கடலுார் தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் திட்டக்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் உதயநிதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:

வரும் 2026 சட்டசபை தேர்தலில் 234 தொகுதி நமது இலக்கு; அதில், 200 தொகுதியில் நாம் வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும். அரசின் திட்டங்களை எடுத்துரைத்து, ஓட்டு சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு நிர்வாகியும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, உதயநிதி வதிஷ்டபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நுாலகத்தை திறந்து வைத்தார்.

முன்னதாக, திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் அமைக்கப்பட்ட, 73 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

பின், திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து வதிஷ்டபுரம் வரை ரோடு ஷோ நடந்தது. 2 கி.மீ., துாரம் சாலையின் இருபுறமும் கட்சியினர் உதயநிதிக்கு வரவேற்பு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us