தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உதயநிதி பிறந்த நாள் தங்க மோதிரம் வழங்கல்

 உதயநிதி பிறந்த நாள் தங்க மோதிரம் வழங்கல்

 உதயநிதி பிறந்த நாள் தங்க மோதிரம் வழங்கல்


ADDED : நவ 29, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரத்தில் துணை முதல்வர் உதயாநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, நேற்று முன்தினம் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.

அண்ணாமலை நகரில், நகர மற்றும் ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்வில், மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதித்தை, தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் வழங்கினார்.

தெடர்ந்து ஓ.பி., மெயின்ரோட்டில், நடந்த நிகழ்வில், ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, மருத்துவ பணியாளர்களுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும், சிதம்பரம் எம்.கே.தோட்டத்தில், இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்வில், பெண்களுக்கு தையல் மிஷின், 'அயனிங்' உபகரணம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் சங்கர், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி, ஆதிதிராவிட நலத்துறை பரந்தாமன், இளைஞரணி ரவிக்குமார், குட்டிமணிஜெகன் மற்றும் பலர் பங்கேற் றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us