/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோணாங்குப்பத்தில் உதயநிதி பிறந்தநாள்
/
கோணாங்குப்பத்தில் உதயநிதி பிறந்தநாள்
ADDED : நவ 28, 2024 06:56 AM

விருத்தாசலம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், கோணாங்குப்பம் கிராமத்தில் உள்ள செவிதிறன் குறைவுடையோர் பதின்ம பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் தர்ம மணிவேல், கோவிந்தராசு, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், சிவக்குமார், பாலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி வீரபாண்டியன், கிளை செயலாளர் ராமு, அந்தோணி ராஜ், வீரபாண்டிய கட்டபொம்மன், ஆனந்த், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர் சத்யராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.