/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்ற பேனர் வைத்த விவகாரம்: தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 'லடாய்' விருதை போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு

ADDED : மார் 02, 2024 06:32 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்தது தொடர்பாக தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள், போலீஸ் ஸ்டேஷனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, விருத்தாசலம் நகரின் பிரதான பகுதிகளில் தி.மு.க.,வினர் வாழ்த்து பேனர்கள் வைத்திருந்தனர்.
இதனையறிந்த அ.தி.மு.க., நகர செயலாளரான கவுன்சிலர் சந்திரகுமார் நேற்று பகல் 11:30 மணிக்கு விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், ரவிக்குமார் ஆகியோரிடம், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளுக்கு பாலக்கரை அம்மா உணவகம், கடைவீதி நான்குமுனை சந்திப்புகளில் பேனர் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு மேற்கண்ட இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாளன்று, பாலக்கரை, கடைவீதி பகுதிகளில் அ.தி.மு.க., சார்பில் பேனர்கள் வைக்கப்படும் என்றார்.
அதற்கு, மாலைக்குள் பேனர்களை அகற்றி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சமாதானம் செய்தனர்.
அப்போது, அங்கிருந்த தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் குறித்து அவதுாறாக பேசுவதாக கூறி, அ.தி.மு.க., கவுன்சிலர் சந்திரகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
போலீசார் இருவரையும் சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர். இதனால், போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு நிலவியது.