ADDED : ஜூலை 09, 2026 04:11 AM
அ நிறம் | அளவு
கடலுார்: அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள கருமாரியம்மன் கோவில் எதிரில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் வெள்ளை நிற பூப்போட்ட கத்திரிப்பூ நிறத்தில் சேலை அணிந்திருந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
