ADDED : பிப் 18, 2026 04:04 AM
அ நிறம் | அளவு
கடலுார்: தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர், ரயில் மோதி இறந்தார்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம்-வரக்கால்பட்டு ரயில்வே நிலையம் இடையே நேற்று காலை 55 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், அவர் மீது மோதியது. இதில், உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார் இருப்புபாதை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
