ADDED : மார் 06, 2026 03:52 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் வி ஸ்கொயர் மாலில் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்கத்தினருக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.
வி ஸ்கொயர் மால் உரிமையாளர்கள் ரமேஷ், டாக்டர் அனிதா ரமேஷ், மால் இயக்குனர் சரவணன் ஆகியோர் மாவட்ட மூத்தோர் தடகள வீரர்கள், 75 பேருக்கு சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
விழாவில், சங்கத்தின் செயலாளர் சுபாஷ் பாபு, துணைத் தலைவர் திருமலை, மாநிலத் துணைத் தலைவர் பாலசுந்தரம் பொருளாளர் திருஞானம் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
