/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
10 நிமிடத்தில் முடிந்த ஒன்றியக் குழு கூட்டம்
/
10 நிமிடத்தில் முடிந்த ஒன்றியக் குழு கூட்டம்
ADDED : ஜன 07, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் 10 நிமிடங்களில் முடிந்ததால் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, வீரமணி, கவுன்சிலர்கள் ஞானசவுந்தரி துரை, ஜெயசம்பத் உள்ளிட்ட உறுப்பினர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தீர்மானம் அறிக்கை வாசிக்கப்பட்டன. அதையடுத்து, டீ பிரேக் முடிந்ததும், 10 நிமிடங்களில் கூட்டம் முடிந்தது. இதனால், கவுன்சிலர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.