ADDED : செப் 23, 2026 03:21 PM
சிதம்பரம், செப். 24 –
பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கடந்த 2012 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள பணப்பயன்களை வழங்கிட வேண்டும். பல ஆண்டாக நிலுவையில் உள்ள பதவி உயர்வு வழங்க வேண்டும், தினக்கூலி மற்றும் தொகுப்பூதியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக் கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த மாதம் 19 ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக போராட்டக்குழுவினர் 300 பேர் நேற்று முன்தினம், சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் தட்டேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
