தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பல்கலைக்கழக ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்

 பல்கலைக்கழக ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்

 பல்கலைக்கழக ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்


ADDED : மார் 05, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், ஜாக் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜன., 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடர்ந்தனர். அதிகாரிகள் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி, 15 நாட்களுக்குள் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். ஆனால் ஊழியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அதையடுத்து, கடந்த பிப்.,26 ம் தேதி முதல் மீண்டும் பல்கலை நிர்வாக கட்டடம் முன்பு காலவறையற்ற, காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். நேற்று முன்தினம் கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகளை அழைத்து, சென்னையில் உயர்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தை தொடர்ந்தனர்.

நேற்று மாலை பல்கலை வளாகத்தில் இருந்து, ராஜேந்திரன் சிலை வரை, ஊழியர்கள் மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளா்கள் ரவி, கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளா்கள் மனோகரன், இளங்கோ, முத்து, வேமனலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us