/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அப்கிரேட் சைக்கிள் கிளப் இரண்டாம் ஆண்டு துவக்கம்
/
அப்கிரேட் சைக்கிள் கிளப் இரண்டாம் ஆண்டு துவக்கம்
ADDED : அக் 11, 2024 06:28 AM
கடலுாரின் மிக பிரம்மாண்டமான சைக்கிள் ஷோரூம் அப்கிரேட் சைக்கிள் கிளப் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் விழாக்கால சிறப்பு விற்பனை துவங்கியது.
கடலுார், கம்மியம்பேட்டை மற்றும் பண்ருட்டியில் இயங்கி வரும் அப்கிரேட் சைக்கிள் ஸ்டோரில் உலகத்தரம் வாய்ந்த சைக்கிள்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விழாக்கால விற்பனையை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சைக்கிள் வாங்கும் அனைவருக்கும் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், வாட்டர் பாட்டில், ஸ்மார்ட் வாட்ச் பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி சைக்கிள் நிறுவனங்களான ஹீரோ, ஹெர்குலஸ், பி.எஸ்.ஏ, சன் கிராஸ் ராலி ,டென்வாக், யுனிராக்ஸ், 91, ரேடியன்ட் போன்ற அனைத்து பிராண்ட் சைக்கிள்களும் விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக பஜாஜ் பைனான்ஸ் மூலம் இ.எம்.ஐ., வசதி செய்து தரப்படுகிறது.
இது குறித்து அப்கிரேட் சைக்கிள் ேஷாரூம் உரிமையாளர் சங்கீதா வசந்தராஜ் கூறுகையில், 'எங்கள் ேஷாரூம் கடலுார் மற்றும் பண்ருட்டியில் உள்ளது. வாடிக்கையாளர்கள் சைக்கிளை ஓட்டி பார்த்து வாங்கிச் செல்லும் வகையில் ட்ரையல் ட்ராக் அமைந்துள்ள ஒரே சைக்கிள் ஷோரூம். இளைஞர்கள் அதிக அளவில் விரும்பக்கூடிய அலாய் மற்றும் கியர் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது பிரபலமாக உள்ள பேட்டரி சைக்கிள்களும் விற்பனைக்கு உள்ளன. சைக்கிளுக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களும் விற்பனை செய்கிறோம்' என்றார்.