/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி, கீரப்பாளையத்தில் யூரியா தட்டுப்பாடு
/
புவனகிரி, கீரப்பாளையத்தில் யூரியா தட்டுப்பாடு
ADDED : நவ 06, 2024 11:07 PM
புவனகிரி; புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதியில் சம்பா விதை நேர்த்தி செய்த விவசாயிகள் யூரியா கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, மேல்புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய பகுதியில் ஆண்டு தோறும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு, நேரடி விதை நேர்த்தி மற்றும் நடவு பணியை மேற்கொண்டுள்ளனர்.
பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில், யூரியா உரம் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சில தனியார் கடைகளில் மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து முன்னோடி விவசாயி ஒருவர் கூறுகையில்: விவசாயிகளுக்கு தேவையான உரம் யூரியா தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. ஒவ்வொரு உரக்கடைகளிலும் இருப்புகள் விவரத்தையும், விலைப்பட்டியலையும் கடை முன்பு எழுதி வைக்க வேண்டும்.
வேளாண் துறை அதிகாரிகள், கடைகாரர்களுக்கு சாதகமாக செயல்படாமல், முறைப்படி கடைகளில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். என்றனர்.