ADDED : மார் 22, 2026 06:47 PM

நடுவீரப்பட்டு: பண்ருட்டி சட்டசபை தேர்தல் பறக்கும் படையினர் அமெரிக்க டாலர் நோட்டுக்கள் பறிமுதல் செய்தனர்.
கடலுார்- விழுப்புரம் சாலையில், மாளிகைமேடு அருகே நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த பண்ருட்டி அடுத்த தொரப்பாடி, புதுத்தெரு தங்கவேல் மகன் ரஞ்சித்குமார் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 2600 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில், 2 லட்சத்து, 44 ஆயிரத்து 426 ரூபாய் இருந்தது தெரிய வந்தது.
தேர்தல் பறக்கும் படையினர் அமெரிக்கா டாலர்களை பறிமுதல் செய்து பண்ருட்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ரஞ்சித்குமார் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்து, பெண் பார்க்க செல்லும் போது அதிகாரிகள் அவரிடமிருந்து அமெரிக்கா டாலர்களை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
