தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பறக்கும் படை சோதனையில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் 

 பறக்கும் படை சோதனையில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் 

 பறக்கும் படை சோதனையில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் 


ADDED : மார் 23, 2026 10:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 10:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: கடலுார் மாவட்டம், மாளிகைமேடு அருகே, தேர்தல் பறக்கும் படையினர், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக தொரப்பாடி ரஞ்சித்குமார் ஓட்டி வந்த காரில், உரிய ஆவணங்கள் இல்லாமல், 2,600 அமெரிக்க டாலர்கள் இருந்தன. அவற்றின் இந்திய மதிப்பு, 2 லட்சத்து 44,426 ரூபாய். அதை, தேர்தல் பறக்கும் படையினர், பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனையில், மணிநகரை சேர்ந்த சசிரேகா சென்ற காரில் இருந்த, 75 சவரன் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 81 லட்சம் ரூபாய்.

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் சோதனை சாவடியில், நேற்று முன்தினம் இரவு, கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை செய்தனர். வங்கி ஏ.டி.எம்., வாகனத்தில், 4.51 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.51 கிலோ தங்க நகைகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us