ADDED : செப் 27, 2025 02:38 AM

அ நிறம் | அளவு
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில், கால்நடைகளுக்கு தோல் கழலை நோய், தடுப்பூசி முகாம் நடந்தது.
கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கால்நடை துறை சார்பில், தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் கால்நடை தடுப்பூசி முகாம் நடந்தது.
கால்நடை மருத்துவர் அபிராமி பங்கேற்று, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினார். உதவியாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
