ADDED : செப் 16, 2026 01:06 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சமூக நாய்கள் மற்றும் பூனைகளுக்கான தீவிர வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் செல்வி முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், கால்நடை மருத்துவர் கார்த்திகேயன், ஆய்வாளர் வேல்முருகன், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
