/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது வடலுார் டி.ஆர்.எம்.,சாந்தி பர்னிச்சர் ேஷாரூம்..
/
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது வடலுார் டி.ஆர்.எம்.,சாந்தி பர்னிச்சர் ேஷாரூம்..
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது வடலுார் டி.ஆர்.எம்.,சாந்தி பர்னிச்சர் ேஷாரூம்..
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது வடலுார் டி.ஆர்.எம்.,சாந்தி பர்னிச்சர் ேஷாரூம்..
ADDED : அக் 11, 2024 06:27 AM

கடலுார் மாவட்டம், வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர், ேஹாம் அப்ளையன்ஸ் ேஷாரூம், டியூரோப்ளெக்ஸ் மெத்தைகள் ஸ்டோர் மற்றும் பாத்திர மாளிகை மக்களுக்கு தன்னிகரற்ற சேவையாற்றி வருகிறது.
வடலுாரில் மிக பிரம்மண்டமாக உள்ள டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் ேஷாரூமில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் மிகக் குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இங்கு கல்யாண சீர்வரிசை பாத்திரங்கள், கிச்சன்வேர், கோவில் பூஜை பொருட்கள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் திருமணத்திற்கு வேண்டிய பொருட்களை ஒரே இடத்தில் குறைந்த விலையில் வாங்கிச் செல்கின்றனர்.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்ய 'டிவி', பிரிட்ஜ், வாஷின்மெஷின், கட்டில், மெத்தை, மிக்சி, பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.தற்போது கடலுார் மாவட்டத்தில் முதன் முதலாக மெத்தைக்கென்று பிரத்யேக ேஷாரூம் வடலுார் சபையில் டியூரோப்ளெக்ஸ் மெத்தைகள் ஸ்டோர் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மெத்தை, தலையணை, குஷன், படுக்கைவிரிப்பு பல்வேறு டிசைன்களில் உள்ளது.
மேலும், ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் நிறுவனத்தினர் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகின்றனர்.
கருங்குழி அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தை தனியார் பள்ளிக்கு நிகராக பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து குளிர்சாதன வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் பள்ளி தரைத்தளம் முழுவதும் டைல்ஸ் அமைத்து கொடுத்துள்ளனர்.வடலுார் புதுநகர் அரசு துவக்கப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் டி.ஆர்.எம்., சாந்தி கல்வி அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி கமிஷனரிடம் நிதி வழங்கியுள்ளனர்.
இதன் உரிமையாளர் ராஜமாரியப்பன் அரிமா சங்க மாவட்ட தலைவர், மாவட்ட அய்யப்ப சேவா சங்க அன்னதான குழு தலைவர், நெய்வேலி நாடார் உறவின் முறை செயலாளர், வடலுார் வள்ளலார் சன்னமார்க்க கொள்கை பரப்பு செயலாளர், தேவி மாரியம்மன் கோவில் பொதுச் செயலாளர், மனித நேய மேம்பாட்டு மைய காப்பாளர் பதவிகளை வகித்து வருகிறார்.