/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் வைஷ்ணவ மாநாடு பக்தர்கள் திரளாக பங்கேற்பு
/
கடலுாரில் வைஷ்ணவ மாநாடு பக்தர்கள் திரளாக பங்கேற்பு
கடலுாரில் வைஷ்ணவ மாநாடு பக்தர்கள் திரளாக பங்கேற்பு
கடலுாரில் வைஷ்ணவ மாநாடு பக்தர்கள் திரளாக பங்கேற்பு
ADDED : ஆக 18, 2025 06:18 AM

கடலுார்: கடலுாரில் நடந்த வைஷ்ணவ மாநாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலுார் ஸ்ரீமத் உடையவர் சபா சார்பில் இரண்டாம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு பாதிரிக்குப்பத்தில் நடந்தது.
சபா நிர்வாகி அரங்க நடராஜன், கருட கொடி ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார். திருக்கோவிலுார் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கி மங்களசாசனம் செய்து வைத்தார்.
சபா தலைவர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். பொருளாளர் அனந்தாழ்வார் ஆண்டறிக்கை வாசித்தார்.
இதனைதொடர்ந்து 'வைணவத்தின் வழி' தலைப்பில் ஸ்ரீநிதி சுவாமிகள், 'சிஷ்யனின் இலக் கணம், சீடனின் இலக்கணம்' தலைப்பில் வேளுக்குடி ரங்கநாத சுவாமிகள் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர்.
'சனாதன தர்மம்' தலைப்பில் விப்ர நாராயண ராமானுஜதாசன், 'ஆச்சாரியன் வைபவம்' தலைப்பில் சாந்தலட்சுமி ராமானுஜதாஸ்யை, 'துயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை' தலைப்பில் நரசிம்மபிரியா ராமானுஜதாஸ்யை, 'பூங்கோவலுார் தொழும்போது நெஞ்சே' தலைப்பில் முகுந்தபிரியா ராமானுஜதாஸ்யை, 'திருப்பல்லாண்டு தலைப்பில்' வெங்கடேஷ் சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றினர்.