/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாஜ்பாய் பிறந்தநாள் விழா; மாஜி எம்.எல்.ஏ., அழைப்பு
/
வாஜ்பாய் பிறந்தநாள் விழா; மாஜி எம்.எல்.ஏ., அழைப்பு
வாஜ்பாய் பிறந்தநாள் விழா; மாஜி எம்.எல்.ஏ., அழைப்பு
வாஜ்பாய் பிறந்தநாள் விழா; மாஜி எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : டிச 24, 2024 07:48 AM

கடலுார்; மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100வது பிறந்தநாளன்று பெண்ணாடத்தில் கொண்டாடப்பட உள்ளதால், அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க, பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழழகன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை.பா.ஜ., மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100வது பிறந்தநாளையொட்டி நாளை (25ம் தேதி) பெண்ணாடம் வாள்பட்டறை மாரியம்மன் கோவிலில் இருந்து பழைய பஸ்நிலையம் வரை ஊர்வலம் நடக்க உள்ளது. தொடர்ந்து பஸ்நிலையத்தில் நடக்கும் விழாவில் பா.ஜ.,மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாஜ்பாய் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். நிகழ்ச்சியில் கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ.,நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.