/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளலார் சர்வதேச மையம் தெய்வீக பேரவை வரவேற்பு
/
வள்ளலார் சர்வதேச மையம் தெய்வீக பேரவை வரவேற்பு
ADDED : ஜன 11, 2024 04:27 AM
சிதம்பரம்: வடலுார் சத்திய ஞானசபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை, தெய்வீக பக்தர்கள் பேரவை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பேரவை நிறுவனர் ஜெமினி ராதா விடுத்துள்ள அறிக்கை:
வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞானசபையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதன்படி, சமீபத்தில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வடலுாரில் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர், சட்டசபையில், 90 கோடியே 90 லட்சத்தில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என, தெரிவித்தார்.
வள்ளலார் சர்வதேச மையம் அமைந்தால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். வள்ளலாரின் சித்தாந்த நெறிமுறைகள் உலக அளவில் மக்களை சென்றடையும். இத்திட்டம் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.