sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வள்ளலார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

/

வள்ளலார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

வள்ளலார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

வள்ளலார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 19, 2025 06:46 AM

Google News

ADDED : மே 19, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 272 மாணவர்களும், 91 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

மாணவி பிரகதி தமிழ் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 என மொத்தம் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி ஸ்ரீ அனுஷ்கா 497 மதிப்பெண்கள், சுஷ்மிதா, தாட்சாயினி இருவரும் 496 மதிப்பெண்கள் பெற்றனர்.

தமிழில் 3 பேர் 99 மதிப்பெண்களும்,ஆங்கிலத்தில் 4 பேர் 100 மதிப்பெண்களும்,கணிதத்தில் 32 பேர் 100 மதிப்பெண்களும், அறிவியலில் 61 பேர் 100 மதிப்பெண்களும்,சமூக அறிவியலில் 34 பேர் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

490 மதிப்பெண்களுக்கு மேல் 17 பேரும், 485 மதிப்பெண்களுக்கு மேல் 38 பேரும்,480 மதிப்பெண்களுக்கு மேல் 59 பேரும்,475 மதிப்பெண்களுக்கு மேல் 77 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 139 பேரும் பெற்றுள்ளனர்.

மாணவிகள் பிரகதி,ஸ்ரீ அனுஷ்கா, சுஷ்மிதா,தாட்சாயணி ஆகியோருக்கு மாணவிகளுக்கும் நண்பர்கள் கல்வி அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் திருமால்வளவன் தலைமையில் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் நான்கு மாணவிகளுக்கும் ரூபாய் நோட்டு மாலைகள் அணிவித்தும், கேக் வெட்டியும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழாவில் பள்ளியின் தாளாளர் சுப்ரமணியன், நண்பர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் சாரங்கபாணி, செயலாளர் ராஜா, பொருளாளர் செந்தில்குமார்,வள்ளலார் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் ஜனார்த்தனன், வள்ளலார் கிட்ஸ் பள்ளியின் தாளாளர் சக்கரவர்த்தி, வள்ளலார் பப்ளிக் ஸ்கூல் தாளாளர் செல்வராஜ் மற்றும் இயக்குனர்கள் நடராஜன்,கண்ணன் மணிவாசகம்,.திருவேங்கடம், ராஜேந்திரன்,சரவணன், சரோஜா அம்மாள்,காண்டீபராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us