/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முருகன்குடியில் வள்ளலார் சன்மார்க்க கருத்தரங்கு
/
முருகன்குடியில் வள்ளலார் சன்மார்க்க கருத்தரங்கு
ADDED : செப் 18, 2025 03:37 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் வள்ளலார் பணியகம் சார்பில் வள்ளலார் சன்மார்க்க கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வள்ளலார் பணியக பொறுப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் வரதராஜன் இயற்கை உணவு; இயற்கை மருத்துவம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
வள்ளலார் பணியக செயலாளர் பிரதாபன், வள்ளலார் பணியக பொது செயலாளர் வள்ளலார் ஆய்வாளர் முனைவர் சுப்ரமணியசிவா, இறையூர் மனவளக்கலை மன்ற பேராசிரியர் லட்சுமி, முருகன், கனகசபை, கனிமொழி, சிலம்புசெல்வி, ராமசாமி, செல்வக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பசியாற்றுவித்தல் நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. முருகன்குடி முருகன் நன்றி கூறினார்.