மாநில அளவிலான கராத்தேப்போட்டி வள்ளலார் பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான கராத்தேப்போட்டி வள்ளலார் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : செப் 16, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: மாநில அளவிலான கராத்தே போட்டியில், மேல் அனுவம்பட்டு வள்ளலார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
சேத்தியாதோப்பு பூதங்குடி சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இப்போட்டியில், சிதம்பரம் அடுத்த மேல் அணுவம்பட்டு வள்ளலார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், கட்டா பிரிவில் லக்சனா முதலிடம், தியாசினி இரண்டாமிடம், ரக்சிகா மூன்றாமிடம் பிடித்தனர். சண்டை பிரிவில் சபரிஷ் முதலிடம், மாதேஷ், ரட்சிதன், பிரீத்திஷா, சுதிஷா இரண்டாமிடம் பிடித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் சண்முகம், தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி, பயிற்சியாளர் சென்சாய் ரெங்கநாதன், கராத்தே பொறுப்பு ஆசிரியர் அபிதா பிரியதர்ஷினி ஆகியோர் பாராட்டினர்.
