தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் கடத்திய வேன் பறிமுதல்

மணல் கடத்திய வேன் பறிமுதல்

மணல் கடத்திய வேன் பறிமுதல்


ADDED : நவ 09, 2024 08:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 08:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய மினிவேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பண்ருட்டி அடுத்த எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றங்கரையில் மணல் கடத்தல் நடப்பதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பிக்கப் மினி வேனில் (டி.என்.20.டி.பி.9024) மணல் கடத்தியது தெரிய வந்தது. உடன் போலீசார் வேனை பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்தியவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us