/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏட்டுக்கு கொலை மிரட்டல் வேன் டிரைவர் கைது
/
ஏட்டுக்கு கொலை மிரட்டல் வேன் டிரைவர் கைது
ADDED : பிப் 17, 2026 05:17 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் போக்குவரத்து போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள திரவுபதியம்மன் கோவிலுக்கு சொந்தமாக இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக ஜங்ஷன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீஸ் ஏட்டு திலகவதி, ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள காட்டுக்கூடலுார் சாலை வழியாக கனரக வாகனங்களை திருப்பி விடும் பணியில் நேற்றுமாலை ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த பொலிரோ பிக்கப் வேன் ஜங்ஷன் சாலை வழியாக பஸ் நிலையம் செல்ல முயன்றது. இதனால், அந்த பிக்கப் வேனை தடுத்து நிறுத்தி, காட்டுக்கூடலுார் சாலையில் செல்லுமாறு ஏட்டு திலகவதி அறிவுத்தினார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வேன் டிரைவர், ஏட்டு திலகவதிக்கு கொலைமிரட்டல் விடுத்தார். வேன் டிரைவரை பிடித்து விருத்தாசலம் போலீசாரிடம் ஏட்டு திலகவதி ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், வேன் டிரைவர் மங்கலம்பேட்டை அடுத்த பில்லுார் கிராமத்தை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான், 36; என தெரியவந்தது.
இது குறித்து ஏட்டு திலகவதி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து, வேன் டிரைவர் முஜிபுர் ரஹ்மானை கைது செய்தனர்.

