/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேன் டயர் வெடித்து விபத்து: 10 பேர் காயம்
/
வேன் டயர் வெடித்து விபத்து: 10 பேர் காயம்
ADDED : ஏப் 18, 2025 05:03 AM
புவனகிரி: வேன் டயர் வெடித்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விருத்தாசலம் அருகே கம்மாபுரத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேனில் வேளாங்கண்ணி கோவிலுக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர்.
வேனை கம்மாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த அகோரமூர்த்தி, 50; ஓட்டினார். புவனகிரி, வண்டுராயன்பட்டு அருகில் காலை 12:00 மணிக்கு வந்த போது, வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அருகில் இருந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த அகோரமூர்த்தி உட்பட 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து காரணமாக விருத்தாசலம்-பரங்கிப்பேட்டையில் 12:30 மணி வரை 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து புவனகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.