தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டித்தர கோரிக்கை

வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டித்தர கோரிக்கை

வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டித்தர கோரிக்கை


ADDED : அக் 19, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம் : திருமலை அகரத்தில் பழுதான வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றி புதிதாக கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணாடம், திருமலை அகரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் மூலம் இப்பகுதி மக்கள் பட்டா, சிட்டா மாற்றம், வருமானம், ஜாதி, இருப்பிடம், முதியோர் உதவித்தொகை, விவசாய காப்பீடு திட்டம் உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் பெற்று பயனடைந்தனர்.

நாளடைவில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் பராமரிப்பின்றி பக்கவாட்டு சுவர்கள் மற்றும் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் கசிவதால் மழைக்காலங்களில் அமர்ந்து பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டடத்தை சுற்றிலும் முட்புதர்கள் அதிகளவில் மண்டியுள்ளன.

இதனால் இங்கு பணிபுரியும் வி.ஏ.ஓ., பெண்ணாடம் அலுவலகத்தில் பணிபுரிவதால் இப்பகுதி மக்கள் 2 கிலோ மீட்டர் துாரம் சென்று சான்றிதழ்கள் பெற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதியோர்கள், பெண்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

எனவே, திருமலை அகரத்தில் பழுதான வி.ஏ.ஓ., அலுவலகத்தை இடித்து அகற்றி புதிதாக கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us