/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவம் ஆலோசனைக் கூட்டம்
/
வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவம் ஆலோசனைக் கூட்டம்
வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவம் ஆலோசனைக் கூட்டம்
வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவம் ஆலோசனைக் கூட்டம்
ADDED : பிப் 23, 2024 10:28 PM
பண்ருட்டி : பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரைமாதம் பிரம்மோற்சவம், திருத்தேர் உற்சவம் நடத்துவது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பரம்பரை தர்மகர்த்தா பாண்டுரங்கன், கஸ்துரிரங்கன் பட்டாச்சாரியார் முன்னிலை வகித்தனர்.
வியாபாரிகள் சங்கத் தலைவர் மோகன், செயலாளர் ராஜேந்திரன், வீரப்பன், சரவணன், ராமமூர்த்தி, பரணிசந்தர், பிரபு, பழனி, ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் ஏப்ரல் 15ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி 10 நாள் உற்சவம் நடத்துவது. கோவில் மடப்பள்ளி சீரமைப்பது.திருத்தேர் செல்லும் பகுதியில் மின் இணைப்பை புதைவட தடமாக மாற்றிட விரைவில் பணி துவங்க கோருவது.திருத்தேர் மேற்கூரை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்தனர்.