தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முன்மாதிரியாக மாற்றப்பட்ட வரக்கால்பட்டு குளம்

 முன்மாதிரியாக மாற்றப்பட்ட வரக்கால்பட்டு குளம்

 முன்மாதிரியாக மாற்றப்பட்ட வரக்கால்பட்டு குளம்


ADDED : மார் 07, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம். மார்ச் 7-: வரக்கால் பட்டு குளம் முன்மாதிரி குளமாக மாற்றப்பட்ட நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டில் கடலுார்- பண்ருட்டி சாலையையொட்டி, இரு ஏக்கர் பரப்பளவில்,

பெரிய குளம் உள்ளது.

அந்த குளத்தை கடந்த, 6 மாதத்துக்கு முன்பு ரூ.15 லட்சம் மதிப்பில் துார் வாரினர். இதனால் கடந்த வடகிழக்கு பருவமழையின் பொழுது பெய்த மழையால் குளத்தில் தற்போது,தண்ணீர் தேங்கி நிற்கிறது.

தற்பொழுது கடலுார் மாவட்டத்திலேயே முன் மாதிரி குளமாக மாற்றுவதற்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் குளத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு செய்தனர். பிறகு குளத்தை சுற்றி சிமெண்ட் தரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது.

மேலும் புல்வெளிகள் ஏற்படுத்தப்பட்டது. நடைபாதை செல்வோர் குளத்தில் தவறி விழாமல் இருப்பதற்காக தடுப்பு கம்பிகளை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குளத்தை சுற்றி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, பூச்செடிகள் மரக்கன்றுகள் நடும் பணி நடக்கிறது.

மாலை நேரங்களில் பொதுமக்கள் அமைதியாக உட்கார்ந்து பொழுதுபோக்குவதற்காக சிமெண்ட் நாற்காலிகள் அமைத்துள்ளனர்.

சிறுவர்கள் விளையாடி மகிழ சறுக்கு மரம் போன்ற விளையாட்டு உபகரணங்களை பொருத்தியுள்ளனர். விரைவில் இந்த குளம் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களையும் துார் வாரினால் நிலத்தடி நீர் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித் துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us