ADDED : ஜன 10, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
திட்டக்குடி: பள்ளி வேன் மோதியதில் வி.சி., நிர்வாகி உயிரிழந்தார்.
திட்டக்குடி அடுத்த தொ.செங்கமேட்டை சேர்ந்தவர் தனபால் மகன் பாக்கியராஜ், 45; வி.சி., கிளை செயலாளர். இவர் நேற்று காலை 7:30 மணியளவில் அப்பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த தனியார் பள்ளி வேன் மோதியது.
இதில், படுகாயமடை ந்த பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆவினங்குடி போலீசார் உடலை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
