தட்டாம்பாளையத்தில் வி.சி.வேட்பாளர் அப்துல்ரஹ்மான் ஓட்டு சேகரித்தார்
தட்டாம்பாளையத்தில் வி.சி.வேட்பாளர் அப்துல்ரஹ்மான் ஓட்டு சேகரித்தார்
ADDED : ஏப் 14, 2026 05:26 PM

பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம்,தட்டாம்பாளையம் கிராமத்தில் வி.சி.வேட்பாளர் அப்துல்ரஹ்மான் பானை சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரித்தார்.
பண்ருட்டி சட்டசபை தொகுதி, அண்ணாகிராமம் ஒன்றியம், வரிஞ்சிப்பாக்கம், காந்திநகர், பூண்டி, ஏரிப்பாளையம், கள்ளிப்பட்டு, குச்சிப்பாளையம், கட்டமுத்துப்பாளையம், ராசாப்பாளையம், கண்டரக்கோட்டை, புலவனுார், மேல்குமாரமங்கலம், தட்டாம்பாளையம், திராசு, மாளிகைமேடு, பாளையம், ஏரிப்பாளையம், பக்கிரிப்பாளையம்,மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, அண்ணாகிராமம், ஆண்டிப்பாளையம், வாத்திப்பாளையம் ஆகிய பானை சின்னத்திற்கு ஒட்டு கேட்டு பிரசாரம் செய்தனர். அப்போது வி.சி.வேட்பாளர் அப்துல்ரஹ்மான் பேசுகையில் தி.மு.க.ஆட்சியில் மகளிருக்கு உரிமை தொகை, மகளிருக்கு 8 ஆயிரம் கூப்பன் வழங்கப்பட உள்ளது.
அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைத்த பாடுபடுவேன் என்றார். இதில் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் ,முன்னாள் ஒன்றிய செயலாளர் திருவேங்கடம், பொதுக்குழு உறுப்பினர் பலராமன், வி.சி.மாவட்ட செயலாளர் அருள்செல்வம்,தி.மு.க.,கலை இலக்கிய பிரிவு அமைப்பாளர் மதனகுரு, மா.கம்யூ., லோகு, காங்., கசேவன், இந்திய.கம்யூ., ஆறுமுகம், ம.தி.மு.க.,ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் , தே.மு.தி.க,,ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
