அண்ணாகிராமம் ஒன்றியத்தில் வி.சி., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
அண்ணாகிராமம் ஒன்றியத்தில் வி.சி., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 11, 2026 10:08 PM

பண்ருட்டி: பண்ருட்டி வி.சி.,வேட்பாளர் அப்துல்ரஹ்மான் அண்ணாகிராமம்ம ஒன்றிய பகுதியில் ஓட்டு சேகரித்தார்.
பண்ருட்டி தொகுதி வி.சி., வேட்பாளர் அப்துல்ரஹ்மான் நேற்று அண்ணாகிராமம் ஒன்றியத்தில், சாத்திப்பட்டு, துண்டுகாடு, நெல்லித்தோப்பு, நல்லாண்டிக்குப்பம், பலாப்பட்டு, பெரியநரிமேடு, முத்துகிருஷ்ணாபுரம், முத்துநாராயணபுரம், சன்னியாசிபேட்டை, பாலுார், குயிலாப்பாளையம் பகுதியில் ஓட்டு சேகரித்தார்.
அவருடன் அண்ணாகிராமம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வெங்கட்ராமன், ராமு, வி.சி., மாவட்ட செயலாளர் அருள்செல்வம், முன்னாள் மாவட்ட செயலர் முல்லைவேந்தன், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், மாவட்ட துணை செயலர் வாசன், தி.மு.க., முன்னாள் ஒன்றியச்செயலர் பலராமன், இந்திய கம்யூ., சிவக்குமார், மோகன், மா.கம்யூ., ஸ்ரீபன்ராஜ், தே.மு.தி.க., கலியபெருமாள், நெப்போலியன், ம.தி.மு.க., ஒன்றிய செயலர் ஜெய்சங்கர், காங்., அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
