sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பக்கத்து வீட்டினரை தாக்க முயன்ற வி.சி., பெண் மாவட்ட செயலாளர்: வீடியோ வைரல்

/

பக்கத்து வீட்டினரை தாக்க முயன்ற வி.சி., பெண் மாவட்ட செயலாளர்: வீடியோ வைரல்

பக்கத்து வீட்டினரை தாக்க முயன்ற வி.சி., பெண் மாவட்ட செயலாளர்: வீடியோ வைரல்

பக்கத்து வீட்டினரை தாக்க முயன்ற வி.சி., பெண் மாவட்ட செயலாளர்: வீடியோ வைரல்


ADDED : ஏப் 03, 2025 07:39 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம் : தியாகதுருகத்தில் நிலம் தொடர்பான பிரச்சனையில் வி.சி., பெண் மாவட்ட செயலாளர், பக்கத்து வீட்டில் வசிப்பவரை தாக்குவதற்கு பாயும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

வி.சி., கட்சியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பழனியம்மாள், 44; இவரது கணவர் வேல்முருகன்,48; தியாகதுருகம் கலைஞர் நகரில் வசிக்கும் இவர்களது வீட்டின் அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

இந்த நிலம் தொடர்பாக கடந்த மார்ச், 12ம் தேதி பழனியம்மாளுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகராஜ் மகன் சரவணன், 38; என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அன்றைய தினமே, தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வருவாய் துறைக்கு தகவல் அனுப்பிய போலீசார், பிரச்சனைக்குரிய இடத்தை 13ம் தேதி அளக்க ஏற்பாடு செய்தனர். அங்கு, 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இடத்தை அளப்பது தொடர்பாக, முறையான தகவல் வரவில்லை எனக்கூறி, பழனியம்மாள் தரப்பினர் அங்கு செல்லாமல் புறக்கணித்தனர். இதனால் இடத்தை அளக்க முடியாமல் வருவாய்த் துறையினர் திரும்பினர்.

இந்நிலையில் தான், பழனியம்மாளும் அவரது கணவர் வேல்முருகனும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களை திட்டி கல்லால் தாக்க பாய்வது போன்ற வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வி.சி., மாவட்ட செயலாளர் பழனியம்மாள் அறிக்கை:

எனது வீட்டின் அருகே அரசு இடத்தில், மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தேன். அப்பகுதியை சேர்ந்த சரவணன், அவரது தாய் பவானி, தம்பி சூர்யா ஆகியோர், அதை சேதப்படுத்தினர்.

இகுறித்து கேட்டபோது, மூவரும் என்னைத் தாக்க வந்தனர். அதனால் எங்களுக்குள் லேசான கைகலப்பு ஏற்பட்டது. அரசு இடத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. இதனை நான் சார்ந்த கட்சியோடு சம்பந்தப்படுத்தி சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.

இது எனது தனிப்பட்ட பிரச்னை. இதற்கும் கட்சி தலைமைக்கும் எந்த பொறுப்பும் இல்லை.

வி.சி., மாவட்ட செயலாளர் பழனியம்மாள் அறிக்கை:

எனது வீட்டின் அருகே அரசு இடத்தில், மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தேன். அப்பகுதியை சேர்ந்த சரவணன், அவரது தாய் பவானி, தம்பி சூர்யா ஆகியோர், அதை சேதப்படுத்தினர்.இகுறித்து கேட்டபோது, மூவரும் என்னைத் தாக்க வந்தனர். அதனால் எங்களுக்குள் லேசான கைகலப்பு ஏற்பட்டது. அரசு இடத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. இதனை நான் சார்ந்த கட்சியோடு சம்பந்தப்படுத்தி சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர். இது எனது தனிப்பட்ட பிரச்னை. இதற்கும் கட்சி தலைமைக்கும் எந்த பொறுப்பும் இல்லை.








      Dinamalar
      Follow us